ADDED : பிப் 18, 2024 12:32 AM
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
ஓ மேட்டுப்பட்டியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கிராம செயலகம் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் ஓ மேட்டுபட்டி ஊராட்சியில் அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தையும், இங்குள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்தும் கூடத்தையும் பார்வையிட்டார்.
மேட்டமலையில் ஊராட்சியில் மடத்துக்காடு கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2.78 லட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.