நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் வரலொட்டியில் ரூ. 19 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வரும் கரிசல் காட்டு ஓடை, வலுக்கலொட்டியில் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் கொட்டகை அமைக்கும் பணி, உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
துப்புரவு பணியாளரிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ சேவை மையத்தினை ஆய்வு செய்தார். பி.டி.ஓ,கள் சண்முகப்பிரியா, போத்திராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.