நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி நாலூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 228 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கினார்.
அ. முக்குளம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட கதிர் அடிக்கும் களம், ரூ. 13 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பள்ளி வாசல் ஊருணி மேம்பாட்டு பணிகள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பி.டி.ஓ.,கள் வாசுகி, ஜெய புஷ்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.