/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தகவலை தெரிவிக்க அலைபேசி எண் கலெக்டர் ஜெயசீலன் அறிவிப்பு

ADDED : பிப் 01, 2024 05:07 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்தி குறிப்பு:
மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள், அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கும் பகுதிகளில் வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி, பலத்த காயம் ஏற்படுகிறது.
எனவே சட்டவிரோதமாக வீடுகளில், அனுமதி பெறாத பகுதிகளில் பட்டாசு, கருந்திரி தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் இதற்கு உடந்தையாக இருக்கும் நிலத்தின் உரிமை யாளர்கள் மீது போலீசாரின் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்குத்தகைக்கு விடக்கூடாது, மீறி உள்குத்தகைக்கு விடுவது கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். விருதுநகர் மாவட்டத்தில் ரகசியமாக பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் குறித்த தகவலை 94439 67578 என்ற அலைபேசி தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் ஆலைகளின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பட்டாசு தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இதே அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும், என்றார்.