/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்
/
அரசு மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்
அரசு மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்
அரசு மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : பிப் 08, 2025 04:37 AM
சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை கலெக்டர் ஜெயசீலன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஜெயசீலன் ஆய்வுக்கு வந்த போது மகப்பேறு மருத்துவமனையின் முகப்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்ததும் கலெக்டர் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு செவிலியர்கள் மட்டும் பணியில் இருந்ததும் தெரியவந்தது.
இரவு பணியில் டாக்டர் இல்லாதது குறித்து செவிலியர்களிடம் கலெக்டர் விசாரித்துள்ளார்.
இது குறித்து சாத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் முனி சாயி கேசவன் கூறியதாவது:
அரசு மகப்பேறு மருத்துவமனையில் 3 மகப்பேறு டாக்டர்கள் இருக்க வேண்டும் இருவர் மட்டுமே உள்ளனர். அதனால் ஒருவருக்கு இரவு நேர கால் டூட்டி போடப்பட்டிருந்தது.
எமர்ஜென்சியாக பிரசவ கேஸ் வரும் பொழுது போனில் அழைத்தால் உடனடியாக மருத்துவர் வந்து உரிய சிகிச்சை அளிப்பார். பணியில் மருத்துவர் இல்லை என கூற முடியாது, என்றார்.