நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஊராட்சியில் ஆவினுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை நேரில் பார்வையிட்டு அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
மம்சாபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வீட்டு வரி ரசீது, மின்வாரிய பெயர் மாற்றம் நகலினை வழங்கினார்.
தாசில்தார், அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

