நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் ராகவன் வரதராஜ் தலைமை வகித்தார். தாளாளர் பிருந்தா ராகவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆன்டோ வரவேற்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், கவிதா ஜகவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.

