/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 22, 2025 07:09 AM

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கே. மீனாட்சிபுரம் கிராமத்தில் அறுந்து தொங்கி கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் கல்லூரி மாணவர் வசந்தபாலமுருகன் 20,பலியானார்.
கணேசனின் மகன் வசந்த பாலமுருகன். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 3 ம் ஆண்டு இளங்கலை படித்தார். நேற்று முன்தினம் திருச்சுழி, மீனாட்சிபுரத்தில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் மின் ஒயர்கள் அறுந்து தொங்கின. நேற்று காலை 8:00 மணிக்கு வசந்த பாலமுருகன் தனது தோட்டத்திற்கு சென்று திரும்பும் போது அந்த பகுதியில் அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து வசந்த பாலமுருகன் சம்பவ இடத்தில் பலியானார். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. திருச்சழி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.