/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தாண்டை வரவேற்க விருதுநகரில் வண்ணமயமான வாணவேடிக்கை
/
புத்தாண்டை வரவேற்க விருதுநகரில் வண்ணமயமான வாணவேடிக்கை
புத்தாண்டை வரவேற்க விருதுநகரில் வண்ணமயமான வாணவேடிக்கை
புத்தாண்டை வரவேற்க விருதுநகரில் வண்ணமயமான வாணவேடிக்கை
ADDED : ஜன 01, 2025 10:11 PM

விருதுநகர்:ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு  விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் பட்டாசு ஆலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாண வேடிக்கை  நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மக்களுக்கு காட்சிப்படுத்தினர். பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா என பல்வேறு வண்ணங்களில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கை காட்டப்பட்டது. வானத்தில் உயரே 300 அடி உயரம் சென்று பரவலாக அரை மணி நேரத்துக்கும் மேல் பேன்ஸி ரக பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டன. கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சோனி பயர் ஒர்க்ஸ் மற்றும் அணில் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.  தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

