ADDED : டிச 13, 2024 03:53 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை வணிகவியல் துறை சார்பில் நிர்வாகம், வணிக நடைமுறைகள் 2024 என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். டீன் கணேசன் அறிமுகம் செய்து பேசினார். துறைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார்.
எத்தியோப்பியா அரசு புத்தாக்கம், தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் பெயிஸா படடா படாசா, மாநாட்டு சிறப்பு மலர் வெளியிட்டு பேசினார்.
இதில் பல்வேறு வெளிநாட்டு பல்கலை பேராசிரியர்கள் மகேஷ் ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டியன், முகமது நவீத், சன்மான், ரசானா ஜூஹைதா, காப்பீடு நிறுவன குறை தீர்ப்பாளர் பேராசிரியர் பிரபாகரன், மதுரை ஐ.சி.எம்.ஏ. உறுப்பினர் செல்வம் பேசினர். பேராசிரியர் ரமேஷ் பாண்டி நன்றி கூறினார்.