ADDED : மே 04, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடந்தது.
சொக்கர் கோயில் அருகே உள்ள காமிக் நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 7ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30 திருக்குறள்கள் ஒப்பித்தல் 11 முதல் 14 வயது மாணவர்களுக்கு 50 திருக்குறள்கள் ஒப்பித்தல் என இரண்டு பிரிவுகளில் நடந்தது.
மொத்தம் 129 மாணவர்கள் பங்கேற்றத்தில் 53 பேர் வெற்றி பெற்றனர். வென்ற மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் சித்திரக்கதை புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

