/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதீத மழையால் பயிர் சேதத்திற்கான இழப்பீடு ரூ. 15 கோடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டுவாடா பணி விறுவிறு

ADDED : மார் 07, 2024 04:56 AM
2023ல் 1132 செ.மீ., மழை பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மழை அளவில் இது தான் அதிகம்.டிச. 18ல் பெய்த 14.6 செ.மீ., கனமழையால் வெள்ள நீர் அதிகளவில் சூழ்ந்தது.
13 கண்மாய்கள் உடைக்கப்பட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டன. திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சாத்துார் பகுதிகளில் வெங்காயம், நெல், உளுந்து, பயறு வகைகள் ஆகியவை நீரில் மூழ்கின.
33 சதவீதத்திற்கு அதிகமாக பாதிப்பை சந்தித்த அனைத்து நிலங்களும் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் என வேளாண்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்13 ஆயிரத்து 884 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டு, இதில் விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 91 லட்சத்து 29 ஆயிரத்து 944 இழப்பீடு கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வேளாண் துறையில் ரூ.13 கோடியே 91 லட்சத்து 29 ஆயிரத்து 943 பணம் இழப்பீடாக வரப்பெற்றுள்ளது. 16 ஆயிரத்து 327 விவசாயிகளுக்கு இப்பணம் பட்டுவாடா செய்யும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது.
தோட்டக்கலைத்துறையில் 2224 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 12 ஆயிரத்து 689 பணம் இழப்பீடாக வரப்பெற்றுள்ளது. மொத்தம் 15 கோடியே 08 லட்சத்து 42 ஆயிரத்து 632 நிதி ஒதுக்கீடு இழப்பீடாக பெறப்பட்டு அதீத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் விரைவில் லோக்சபா தேர்தல் தேதி வேறு அறிவிக்கப்பட உள்ளதால் விரைந்து பண பட்டுவாடா செய்ய விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.