/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை
/
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை
ADDED : பிப் 05, 2025 11:56 PM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள், கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றனர்.
விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லுாரியின் நுாலகத்துறை சார்பாக, 'வாசிக்க வாங்க' என்ற தலைப்பில் மாநில கல்லுாரிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடந்தது.
கல்லுாரி நுாலகர் ரெஜினா தலைமை வகித்தார். போட்டிகளில் எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்று சுழல் கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், கல்லுாரி தலைவர் மயில்ராஜன், செயலர் சங்கர சேகரன், முதல்வர் செல்லத்தாய் ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.