/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு, தனியார் பஸ் டிரைவர்களிடையே போட்டி; விபத்து அச்சத்தால் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
அரசு, தனியார் பஸ் டிரைவர்களிடையே போட்டி; விபத்து அச்சத்தால் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
அரசு, தனியார் பஸ் டிரைவர்களிடையே போட்டி; விபத்து அச்சத்தால் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
அரசு, தனியார் பஸ் டிரைவர்களிடையே போட்டி; விபத்து அச்சத்தால் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 11, 2025 11:30 PM

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட தொலைதுார நகரங்களுக்கு அரசு பஸ்கள், சாத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் அரசு -- தனியார் பஸ் டிரைவர்களிடையே நிலவும் போட்டி காரணமாக விபத்துக்கள் நிகழ்கின்றன. சில தினங்களுக்கு முன் மதுரை --- சிவகாசி வழித்தடத்தில் பயணிகளை ஏற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே போட்டி நிலவியது.
மாவட்டத்தில் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று பயணிகளை ஏற்றுவதால் அரசு பஸ்களில் கூட்டம் குறைவதோடு வருமானமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதன் காரணமாக விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வந்த தனியார் பஸ்சை உரசியபடி அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இரு பஸ்களிலும் பயணித்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. ஆத்திரம் அடைந்த தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டர், அரசு பஸ் டிரைவர், கண்டக்ரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் அச்சமைடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மற்ற பஸ் ஊழியர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர். சில நேரங்களில் நேரத்திற்கு செல்ல வேண்டும் என இரு அரசு பஸ் டிரைவர்களிடையேயும் போட்டி ஏற்படுகிறது. இதுபோன்ற போட்டிகளால் பயணிகள் தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் நிலை உள்ளது.
''அதிவேகமாகவும் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் போட்டி போட்டு பஸ்களை இயக்கும் டிவைர்கள் மீது டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பயணிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர்.