UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான ஆங்கிலம், தமிழ், பேச்சு போட்டி, ஓவியப்போட்டி உள்பட 17 போட்டிகள் கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
இதில் துறை தலைவர் செந்தில், கல்லுாரி நிர்வாக குழு தலைவர் மாரியப்பன், சிறப்பு விருந்தினராக இசை ஆசிரியர் சுபாஷினி பங்கேற்றார். ஏற்பாடுகளை இணை பேராசிரியர் முத்துலட்சுமி, உதவி பேராசிரியர் மஞ்சு, ஷோபனா தேவி, விஜயலட்சுமி ஆகியோர் செய்தனர்.
