/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி ரோபாட்டிக்ஸ் மாநாடு
/
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி ரோபாட்டிக்ஸ் மாநாடு
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி ரோபாட்டிக்ஸ் மாநாடு
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி ரோபாட்டிக்ஸ் மாநாடு
ADDED : ஜூன் 01, 2025 03:44 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் ஐ.இ.இ. மாணவர் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ் சோதனை, பொறியியல் மதிப்பீடு குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாடு நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டு தலைவர்ராஜா சுப்பிரமணியன் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பெரிய பேசினார். மலேசிய பேராசிரியர் தேஷிந்தா அரோவா தேவி ஆராய்ச்சி கட்டுரைமலரை வெளியிட்டு பேசினார்.
இந்தோனேசியா பினா தர்மா பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரைபாசுகி, பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் நாகராஜன், ஆந்திரா என்.ஐ.டி. பேராசிரியர் கார்த்திக் சேஷாத்திரி ஆகியோர் அடுத்த தலைமுறை ரோபோக்கள் குறித்து பேசினர்.
கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தீபலட்சுமி, பள்ளி கொண்ட ராஜசேகரன், தேவராஜ் பேசினர். வெங்கடேஷ் நன்றி கூறினார். மாநாட்டில் வெளிநாடு ஆராய்ச்சி நிபுணர்கள், கணினி பள்ளி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.