ADDED : பிப் 01, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி.மு.க., அரசு அமைந்த உடன் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசீலன், மாநில துணை தலைவர் ஹபிப் அப்துல்லா பேசினர்.