/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ.,ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள்
/
பா.ஜ.,ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள்
பா.ஜ.,ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள்
பா.ஜ.,ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள்
ADDED : ஜன 20, 2024 04:14 AM
சிவகாசி: ''பா.ஜ., ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது ,என மணிப்பூர் மாநில பா.ஜ.,எம்.பி., மஹாராஜா லீெஷம்பா சனாஜோபா தெரிவித்தார்.
சிவகாசி அருகே புதுக்கோட்டையில் மத்திய அரசின் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' (விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நிகழ்ச்சி நடந்தது.
மணிப்பூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பா.ஜ. எம்.பி., மஹாராஜா லீஷெம்பா சனாஜோபா மற்றும் அவரது மனைவி ஹபோம் ஆனாமிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்களை கிராமப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து மணிப்பூர் எம்.பி பேசியதாவது, 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற யாத்திரையின் நோக்கமே 2047ல் உலகின் முதன்மை நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே. சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பா.ஜ., ஆட்சிக்கு முன் 50 சதவீத வீடுகளில் மட்டுமே காஸ் சிலிண்டர் இணைப்பு இருந்தது. ஆனால் உஜ்வாலா யோஜான திட்டத்தில் பெண்களின் நலனுக்காக மோடி ஆட்சியில் 100 சதவீதம் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
லோக்பா தொகுதி ஒருங்கிணைப்பாளர் வெற்றி வேல், மாநில பொது செயலாளர் பொன். பால கணபதி, மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.
நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அவர் தனது அவரது மனைவி லீமெரம்பியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.