/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழை, வெயிலில் சுரங்கப் பாதை கான்கிரீட் சிலாப்கள் பாழாகும் நிலை
/
மழை, வெயிலில் சுரங்கப் பாதை கான்கிரீட் சிலாப்கள் பாழாகும் நிலை
மழை, வெயிலில் சுரங்கப் பாதை கான்கிரீட் சிலாப்கள் பாழாகும் நிலை
மழை, வெயிலில் சுரங்கப் பாதை கான்கிரீட் சிலாப்கள் பாழாகும் நிலை
ADDED : டிச 29, 2024 04:06 AM

விருதுநகர்: ஆவல்சூரன்பட்டி ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக வைக்கப்பட்ட கான்கிரீட் சிலாப்கள் பணிகள் துவங்காததால் மழை, வெயிலுக்கு பாழாகி வருகிறது.
நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சென்னை, பெங்களூரு, கோவை, ஈரோடு, மதுரை உள்பட பல பகுதிகளுக்கு விருதுநகர் மாவட்டம் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவை விருதுநகர் அருகே ஆவல்சூரன்பட்டி தண்டவாளம் வழியாக காலையில் இருந்து மறுநாள் வரை சென்று வரும் போது எல்லாம் வாகனங்கள் குறுக்கே சென்று விடாமல் இருப்பதற்காக கேட் மூடப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ அவசரத்திற்காக காத்திருப்பவர்கள் நீண்ட நேரம் கேட் திறக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக கான்கீரிட் சிலாப்கள் தயார் செய்யப்பட்டு பல மாதங்களாக இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை பணிகள் துவங்காததால் மழை, வெயிலுக்கு பாழாகி சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கான்கிரீட் சிலாப்களை சுற்றி முட்புதர்கள், செடி, கொடிகள் அடர்ந்து, நிறைந்து இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலை உண்டாகியுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகத்தின் பணம் வீணாகும் நிலை இருப்பதால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

