ADDED : டிச 05, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தமிழர் தலை நிமிர் காலம் எழுமின் அமைப்பு சார்பில் 14வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு 2025 ஜன. 8 முதல் ஜன. 11 வரை சென்னையில் நடக்கிறது.
இதில் 40க்கும் மேலான நாடுகளில் இருந்து தமிழ் தொழிலதிபர்கள், தமிழ் ஆளுமைகள், தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கான முன்னோட்டக் கூட்டம் விருதுநகர்வியாபாரத் தொழில் துறைச் சங்கத் தலைவர் யோகன் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் முத்து, சிறப்பு விருந்தினர் தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், நிர்வாகிகள் சரவணன், மகேந்திரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.