நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சார்பில் சங்கம விழா நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். முதல்வர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர்கள் சுரேஷ்குமார், செல்வராஜ், ஆட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜ் வாழ்த்தினர்.
முன்னள் மாணவரான சினிமா இயக்குனர் சமுத்திரக்கனி பேசுகையில்: கல்லுாரியில் படித்த மாணவர்கள் எங்கு சென்றாலும் முகமூடி இல்லாமல் இயல்பாக இருப்பது மகிழ்ச்சி. ஆசையும் விருப்பமும் வெவ்வேறானது.
அதை புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் விருப்பத்துடன் உழைத்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என பேசினார்.

