/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடு ரோட்டில் லாரியை நிறுத்தி செங்கல் இறக்குவதால் நெரிசல்
/
நடு ரோட்டில் லாரியை நிறுத்தி செங்கல் இறக்குவதால் நெரிசல்
நடு ரோட்டில் லாரியை நிறுத்தி செங்கல் இறக்குவதால் நெரிசல்
நடு ரோட்டில் லாரியை நிறுத்தி செங்கல் இறக்குவதால் நெரிசல்
ADDED : நவ 10, 2024 06:55 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நடு ரோட்டில் லாரியை செங்கல் வைத்து லோடு இறக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை போலீசர்களும் கண்டு கொள்வதில்லை
அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் ரோடு குறுகலாகவும், ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
நேற்று மதியம் விருதுநகர் ரோட்டில் செங்கல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். ரோட்டில் நடுவில் ஒரு செங்கலை வைத்துவிட்டு, லாரியில் உள்ள செங்கலை பல மணி நேரம் இறக்கி உள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்தது.
இது போன்று போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படுத்தும் வகையில் நகரின் பல பகுதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.