/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் மெயின் பஜாரில் நெரிசல்கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
/
விருதுநகர் மெயின் பஜாரில் நெரிசல்கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
விருதுநகர் மெயின் பஜாரில் நெரிசல்கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
விருதுநகர் மெயின் பஜாரில் நெரிசல்கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
ADDED : அக் 29, 2024 04:38 AM
விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் ஏற்படும் நெரிசலால் மக்கள் திண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் மெயின் பஜாரில் பொதுவாக வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் விருதுநகரை சுற்றிய பகுதிகளில் இருந்து வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், கடைகளுக்கான சாமான்கள் வாங்க வாடிக்கையாளர்கள் மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர்.
இதனால் தினமும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நெரிசலை சரிசெய்ய போதிய அளவில் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் போக்குவரத்து போலீசார் ஆட்கள் பற்றாக்குறையால் திண்டாடும் நிலையில் மற்ற ஸ்டேஷன்களைச் சேர்ந்தவர்கள் மெயின் பஜாரில் நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனாலும் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் தற்போது அதிகரித்து உள்ளதால் பஜாருக்குள் சென்று வெளியே வருவதற்குள் ஒரு வழியாகி விடுகின்றனர்.
எனவே பண்டிகை நெருங்குவதால் மெயின் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஏற்படும் நெரிசல், கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக சென்று வர முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

