/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
/
காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
ADDED : பிப் 13, 2024 05:17 AM
விருதுநகர் : இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் வேட்பாளர்களுக்கு தகுதியானவர்கள். காங். பிரதமர் வேட்பாளர் ராகுல் என எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியாதவது:
தமிழக கவர்னர் ரவி அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு செயல்படுகிறார். தமிழக அரசின் கொள்கைகளை தொடர்ந்து புறக்கணித்து பா.ஜ., தலைவர்களை போல செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. நிதி குறைப்பு, வெள்ளப் பாதிப்பு, மீனவர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு லோக்சபாவில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
2014 ல் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 614 வது இடத்தில் இருந்த அதானியை, முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளை மட்டுமே பிரதமர் மோடி செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரிவிக்கப்படும். தி.மு.க., தலைவர்கள், அமைச்சர்களை மத்திய அரசு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வைத்து மிரட்டுகிறது, என்றார்.