/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் காங்., ஆர்ப்பாட்டம்
/
சாத்துாரில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் வடக்கு ரத வீதியில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்தும் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகாசி அசோகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர தலைவர் அய்யப்பன், மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். சாத்துார் வெம்பக்கோட்டை வட்டாரத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

