ADDED : ஆக 31, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: உத்தரகாண்டில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்த இடத்தை கங்கை நீரால் புனிதம் செய்கிறோம் என்ற பெயரில் சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தும் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை கண்டித்து விருதுநகரில் காங். கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்மோகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ரெங்கசாமி, நகரத் தலைவர் நாகேந்திரன், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சிவகுருநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
