/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காங்., அதிக இடங்களை கேட்கும்: மாணிக்கம் தாகூர்
/
காங்., அதிக இடங்களை கேட்கும்: மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூன் 28, 2025 12:20 AM
சிவகாசி: சட்ட சபை தேர்தலில் வாங்கிய இடங்களை விட இந்த முறை காங்கிரஸ் அதிக இடங்களை கேட்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என மாணிக்கம் தாகூர் எம்.பி.,தெரிவித்தார்.
சிவகாசியில் அவர் கூறியதாவது:
விஜய்யை பொறுத்தவரை பா.ஜ.,வோடு தோழமையாகவோ, அ.தி.மு.க.,வை போல் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தோ எந்த அரசியலும் செய்யவில்லை. பட்டாசு தொழிலுக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.
பட்டாசு தொழிலை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை கிடைத்த 25 இடத்தை விட வரும்தேர்தலில் அதிகமான இடங்களை கேட்டு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது:
எம்.பி., மேம்பாட்டு நிதியை ஒரு முறைக்கு 10 முறை கேட்டால் தான் வழங்குகின்றனர்.2026ல் என்.டி.ஏ., கூட்டணி ஆட்சியமைக்கும், அமைச்சரவையில் பா.ஜ., இடம்பெறும் என்று பா.ஜ.,வினர் கூறுவதற்காகவே அ.தி.மு.க., தோல்வியடையும். பா.ஜ.,வை தோற்கடிக்கும் அனைத்து பணிகளையும் அ.தி.மு.க.,வினரே செய்வர்.
கீழடி ஆய்வை சிறப்பாக செய்து முடித்த அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாற்றம் செய்தனர். தமிழரின் வரலாற்றை அழிக்கும் நோக்கில், போதிய சான்று இல்லை என்று கூறுவது வேதனையாக உள்ளது.