/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைகை எக்ஸ்பிரசுக்கு இணைப்பு ரயில் --பயணிகள் கோரிக்கை
/
வைகை எக்ஸ்பிரசுக்கு இணைப்பு ரயில் --பயணிகள் கோரிக்கை
வைகை எக்ஸ்பிரசுக்கு இணைப்பு ரயில் --பயணிகள் கோரிக்கை
வைகை எக்ஸ்பிரசுக்கு இணைப்பு ரயில் --பயணிகள் கோரிக்கை
ADDED : ஜன 29, 2024 04:58 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இருந்து வைகைஎக்ஸ்பிரஸ்ரயிலுக்கு இணைப்பு ரயில் கோரிக்கை நீண்ட காலமாக பயணிகளிடம் இருந்து வருகிறது. இதன் மூலம் இணைப்பு பெற்று பல்வேறு தொலைதுார பகுதிகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு உள்ளது.
வைகைஎக்ஸ்பிரஸ் ரயில்மதுரையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து மதுரைக்கும் அதிவேக விரைவு சேவையாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளிடையே அதிக வரவேற்பு பெற்ற இவ்வண்டியை விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் காலை நேர சென்னை பயணத்திற்கு பெரிதும் நம்பியுள்ளனர். இந்த வண்டிக்கு இணைப்பு ரயில் சேவை தருவதன் மூலம் கூடுதலாக சில ரயில்களும் இணைப்பு பெற்று அதன் மூலம் தொலைதுார ஊர்களுக்கு பயணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அவ்வகையில் வைகை, கோவை, ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை வந்தே பாரத் ரயில், பாலருவி விரைவு ரயிலுக்கு தென்காசியில் இணைப்பு கிடைக்கும். குறிப்பாக வைகைஎக்ஸ்பிரஸ் ரயிலுக்குஒரு இணைப்பு ரயில் கேட்பதன் மூலம் ஐந்து ரயில்களுக்கு இணைப்பு கிடைக்கும்.
விருதுநகர் மாவட்ட மக்கள் மருத்துவம், தொழில், கல்வி உள்ளிட்ட பயண நோக்கங்களுக்காக அதிகாலை மதுரையை அடைய வேண்டும் எனில் குறிப்பிட்ட சில பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. முதியோர் குழந்தைகள் பஸ் பயணத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ரயில் கோரிக்கை மூலம் அதிகால பயண பிரச்சனை தீர்வு காணப்படும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.