/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் கிடப்பில் போட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி
/
தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் கிடப்பில் போட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி
தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் கிடப்பில் போட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி
தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் கிடப்பில் போட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி
ADDED : ஜன 22, 2025 06:25 AM

சிவகாசி : சிவகாசி ஆனையூர் ஊராட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி ஆனையூர் ஊராட்சி செண்பகக்குட்டி தெரு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஊராட்சி அலுவலகம் அருகே ஒரு ஆண்டிற்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி துவங்கப்பட்டது. பில்லர் அமைப்பதற்காக கம்பிகள் வைத்த நிலையில் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது கம்பிகள் துருப்பிடித்துள்ளது.
இதேபோல் ஆனையூர் ஊராட்சி சிலோன் காலனி, திருப்பதி நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக சிலோன் காலனி அங்கன்வாடி மையம் அருகே ஒரு ஆண்டிற்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக பில்லர்கள் அமைக்க கம்பிகள் வைத்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தவிர அம்பேத்கர் காலனியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக வாஸ்து செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.