/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாட்சியாபுரம் மேம்பால பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறுமா; போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு வருமா
/
சாட்சியாபுரம் மேம்பால பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறுமா; போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு வருமா
சாட்சியாபுரம் மேம்பால பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறுமா; போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு வருமா
சாட்சியாபுரம் மேம்பால பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறுமா; போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு வருமா
UPDATED : ஆக 06, 2025 09:27 AM
ADDED : ஆக 06, 2025 08:18 AM

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியா புரம் ரயில்வே கிராசிங்கில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி 2024 ஜூலை 26ல் பணி துவங்கியது.
2026 பிப். 15க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டது.
ரயில்வே துறை சார்பில் பாலத்திற்கு மேலே பாலம் அமைப்பதற்காக இருபுறமும் மூன்று துாண்களைக் கொண்ட பிரம்மாண்ட பில்லர் அமைக்கும் பணி நடந்ததுள்ளது.
கிழக்கு பகுதியில் உள்ள 9 துாண்களில் கான்கிரீட் பிளாக்குகள் இணைக்கப்பட்டு ரயில் தண்டவாளம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மேற்குப் பகுதியிலும் இதேபோல் கான்கிரீட் பிளாக்குகள் இணைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மேலும் ரயில் தண்டவாளத்தின் மேல் பாலம் அமைப்பதற்காக இரு புறமும் உள்ள துாண்களை இணைக்கும் வகையில் நான்கு கார்டர்கள் பொருத்தப்பட்டு அதன் இணைப்புப் பணியும் முடிந்துள்ளது.
நகரின் முக்கிய பாலமான இது திட்டமிட்ட காலத்திற்குள் பாலம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
அருண்குமார் தனியார் ஊழியர், சாட்சியாபுரம்: ரயில்வே மேம்பால பணிகள் துவங்கிய நாளிலிருந்து தண்டவாளத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதியில் நகருக்குள் வருவதற்கு பெரிதும் சிரமமாக உள்ளது.
இப்பகுதியில் இருந்து வருகின்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிழக்குப் பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட நேரிட்டால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் உள்ளது. எனவே பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.
தண்டவாளத்தின் கிழக்கு, மேற்கு பக்கம் துாண்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணியும் முடிந்துவிட்டது.
தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 2026 பிப்.15க்குள் பணிகளை முடிக்க திட்டமிட்ட நிலையில், 2025 இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது, என்றனர்.