/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரியாதிகுளம் கலுங்கு அருகே கட்டடக் கழிவுகள் --உபரி நீர் வெளியேற சிக்கல்

ADDED : ஆக 11, 2025 03:18 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் பெரியாதிகுளம் கண்மாய் கலுங்கு அருகே கொட்டப்பட்டு வரும் கட்டட, சாக்கடை கழிவுகளால் உபரி நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுவது உடன் அப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பெரியாதிக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் யூனியன் பராமரிப்பின் கீழ் உள்ள இக்கண்மாய் அருகில் உள்ள பாசன விளை நிலங்களுக்கு அடிப்படையாக உள்ளதுடன் கண்மாயை சுற்றியுள்ள குடியிருப்புகளான ஐ.என்.டி.யு.சி நகர், அண்ணாநகர், பச்ச மடம், எம்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் கண்மாய் உபரி நீர் வெளியேறும் கலுங்கு பகுதி மற்றும் கரையை ஒட்டி 50க்கும் அதிகமான லோடு கட்டடக்கழிவு, சாக்கடை கழிவு மண் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறும் போது தடை ஏற்படுவது உடன் தொடர் செயலால் மழைக்காலத்தில் சுகாதார கேட்டிற்கு வாய்ப்பு உள்ளது.
இதன் அருகே அமைந்துள்ள விவசாயக் களத்திற்கான பாதைக்கும் தடை ஏற்படுவதால் விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.