/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.1.38 கோடியில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் விரைவில் துவக்கம்
/
ரூ.1.38 கோடியில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் விரைவில் துவக்கம்
ரூ.1.38 கோடியில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் விரைவில் துவக்கம்
ரூ.1.38 கோடியில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் விரைவில் துவக்கம்
ADDED : ஆக 02, 2025 12:32 AM
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்து இந்த மாதம் ஆக. 21 வந்தால் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கழிப்பறை, டூவீலர் பார்க்கிங், சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றிற்காக ரூ.1.38 கோடியில் ஒதுக்கி கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 30 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு அரசியல் காரணங்களால் செயல்படாமல் முடங்கி கிடந்தது.
இந்நிலையில் முந்தைய கலெக்டர் ஜெயசீலன் முயற்சியாலும், கால மாற்றத்திற்கேற்ப நகரில் இன்னொரு பஸ் ஸ்டாண்ட் வசதி தேவை இருந்ததாலும், அவை செயல்பாட்டிற்கு 2024 ஆக. 21ல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விரைவில் ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது.
இதற்கு பல்வேறு மக்கள் நல அமைப்புகள் ஆதரவாக செயல்பட்டன.
இன்னும் புது பஸ் ஸ்டாண்டில் திருநெல்வேலி, மதுரை மண்டல பஸ்கள் உள்ளே வந்து செல்வது கிடையாது.
துவக்கத்தில் வந்தாலும் தற்போது அறவே வருவது கிடையாது. சென்னை செல்லும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் கூட வந்து விட்டன. ஆனால் இவை வராமல் உள்ளன.
இதே போல் டூவீலர் நிறுத்த வசதி இல்லாததால் கிடைக்கும் இடங்களில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.69 லட்சம் பொது நிதி, மீதம் ரூ.69 லட்சம் மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து நகராட்சி தலைவர் மாதவன் கூறியதாவது: பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புது பஸ் ஸ்டாண்டில் முக்கிய தேவையாக உள்ள கழிப்பறை, சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது.
தற்போது உள்ள டூவீலர் நிறுத்தத்தை சற்று விரிவுப்படுத்தி கட்ட உள்ளோம். பஸ் ஸ்டாண்டின் கட்டடம் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால் பேட்ஜ் பணிகள் பார்க்க உள்ளோம். நுழைவுப்பகுதிகளில் வணிக கடைகள் ஏற்படுத்த உள்ளோம், என்றார்.
நிதி ஒதுக்கிய நிலையில் விரைந்து பணிகளை துவங்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஓராண்டு நிறைவடையும் சூழலில், இனிமேலாவது திருநெல்வேலி, நாகர்கோவில் பஸ்களை பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என விருதுநகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.