/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய்களில் விதிமீறி மண் அள்ளியதால் விவசாயிகள் ... கண்ணீர்: தண்ணீர் இருந்தும் மடையை எட்ட முடியாத பரிதாபம்
/
கண்மாய்களில் விதிமீறி மண் அள்ளியதால் விவசாயிகள் ... கண்ணீர்: தண்ணீர் இருந்தும் மடையை எட்ட முடியாத பரிதாபம்
கண்மாய்களில் விதிமீறி மண் அள்ளியதால் விவசாயிகள் ... கண்ணீர்: தண்ணீர் இருந்தும் மடையை எட்ட முடியாத பரிதாபம்
கண்மாய்களில் விதிமீறி மண் அள்ளியதால் விவசாயிகள் ... கண்ணீர்: தண்ணீர் இருந்தும் மடையை எட்ட முடியாத பரிதாபம்
ADDED : ஆக 02, 2025 12:32 AM

ராஜபாளையம்: மாவட்டத்தில் பல பகுதிகளில் கண்மாய்களின் நீர் பிடிப்பு பகுதியின் அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மடைக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
விவசாயத்திற்கும் நீர் பாசனத்திற்கும் கண்மாய்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பள்ளமான பகுதியாக மழை நீரை தேக்கி வைக்கும் விதமாக அமைத்துள்ளத்துடன் தண்ணீரை முறையாக சேமித்து பயன்படுத்தும் ஒழுங்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பல நுாறு ஆண்டுகளாக இந்த அமைப்பு மூலம் வறட்சியான பகுதிகளையும் தண்ணீர் தேக்கி வைத்து வாய்க்கால்கள் அமைத்து தேவைப்படும் வகையில் பருவ நிலைக்கு ஏற்ப பயிர்களின் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே இவற்றில் அதிகப்படியாக சேரும் மண்ணை அகற்றி பராமரிப்பு செய்ய ஊர் மக்கள் இணைந்து மராமத்து பணிகளில் ஈடுபடுவதோடு, மண்பாண்டங்கள் செய்பவர்கள் இதிலிருந்து மண் எடுத்தும், விவசாய தேவைக்கு வண்டல் மண் போன்ற வகைகளில் பணிகள் நடை பெற்றன.
தற்காலத்தில் இம்முறை வழக்கொழிந்து குடி மராமத்து என்று கண்மாய்களில் மண் எடுக்க அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து விவசாயிகள் போர்வையில் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் இயந்திரங்களை வைத்து குளம் போன்று தோண்டி எடுத்து விதி மீறல் நடந்து வருகிறது.
குறிப்பாக ராஜபாளையம் சுற்றி உள்ள சேத்துார், தேவதானம், முகவூர், சத்திரப்பட்டி என அனைத்து பகுதி கண்மாய்களிலும் விதி மீறி மண் திருட்டு என்பது கட்டுப்பாடு இன்றி நடந்துள்ளது.
இதனால் கோடை காலத்தில் கண்மாய்களில் நீர் மட்டம் குறைந்து ஆங்காங்கு ஏற்கனவே குளங்கள் போல் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி காணப்படும். கண்மாயின் பாசன மடைகளின் மட்டத்தை விட பள்ளத்தில் தேங்குவதால் கண்முன்னே தண்ணீர் இருந்தும் விவசாய தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
தொடர்ந்து நடைபெறும் இது போன்ற விதி மீறலால் கண்மாயின் ஆதாரம் பாழாவதுடன் அரசுக்கு வரவேண்டிய முறையான நிதி வருவாய் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் பைகளுக்கும் சென்று விடுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரமான கண்மாயை கூறு போடும் இச்செயலை முறையாக கண்காணித்து நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.