நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் பர்பெக்ட் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
செயலாளர் விக்டர் வரவேற்றார். கூட்டத்தில், அரசு மருத்துவமனைக்கு சுடுதண்ணீர் இயந்திரம், போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடுதல், நடைபாதை வியாபாரிகள், நரிக்குறவர்களுக்கு குடை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குனர்கள் தாமோதரக்கண்ணன், மணிகண்டன், பொன் ராம், பிரின்ஸ், ரமேஷ் குமார், முகமது பரக்கத் அலி, பாலசுப்பிரமணியன், ரமேஷ் கண்ணன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.