நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் அதியமான் தலைமையில் நடந்தது.
இதில் பூவை ஈஸ்வரன், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் கவுதமன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பட்டியல் சமூக இட ஓதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வரைப்படுத்துதல், ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துதல், ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றி பொதுப் பெயரில் நலத்துறை அமைக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சென்னையில் 2025 ஜன. 6ல் அருந்ததியர் உள் இட ஓதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.