நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து அரசு, உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பிளஸ் டூ முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கு நுாறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட உள்ளது என்றும்எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி எடுக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அரசின் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து எடுத்துக்கூற வேண்டும், குடும்ப வறுமை காரணமாக கல்வி தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அறக்கட்டளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

