நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் ஜூலை 14ல் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்து அரசு துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆண்டாள் கோயிலில் நடந்தது.
சிவகாசி சப் கலெக்டர் பாலாஜி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சக்கரையம்மாள் முன்னிலை வகித்தார்.
தாசில்தார் பாலமுருகன், டி.எஸ்.பி. ராஜா, அரசு மருத்துவர் காளிராஜ் மற்றும் மின்வாரியம், போலீஸ், வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக நாளன்று அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் உட்பட அனைத்து வசதிகளையும் செய்ய அந்தந்த துறையினர் தாமதம் இன்றி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.