ADDED : ஜன 14, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பொங்கல் விழா நடந்தது.
கல்வி குழுமங்கள் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து புது பானையில் பொங்கலிட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி பரிசு வழங்கினர்.

