/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் தொடர் சாரல் மழையால் உளுந்து,பாசிப்பயறு பயிர்கள் பாதிப்பு
/
சாத்துாரில் தொடர் சாரல் மழையால் உளுந்து,பாசிப்பயறு பயிர்கள் பாதிப்பு
சாத்துாரில் தொடர் சாரல் மழையால் உளுந்து,பாசிப்பயறு பயிர்கள் பாதிப்பு
சாத்துாரில் தொடர் சாரல் மழையால் உளுந்து,பாசிப்பயறு பயிர்கள் பாதிப்பு
ADDED : நவ 29, 2024 05:08 AM
சாத்துார்: சாத்துார் பகுதியில் தொடர் சாரல் மழையால் உளுந்து, பாசி பயறு பயிர்கள் பாதிப்படைந்துள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாத்துார் பாப்பாகுடி, என். மேட்டுப்பட்டி, மாயூர்நாதபுரம் பகுதியில்விவசாயிகள் மழையை நம்பி மானாவாரி நிலத்தில் உளுந்து, பாசி பயிர்களை பயிரிட்டனர். ஏக்கருக்கு உழவு, விதை களை எடுப்பு, மருந்து தெளிப்பு என ஏக்கருக்கு ரூ 15,000க்கு மேல் செலவு செய்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. உளுந்து பாசிப்பயறு ஆகிய பயிர்கள் பூ பூத்து காய் காய்க்கும் நிலையில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்ததால் செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து விழுந்து விட்டன.
இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி பி.டி. ராஜ் கூறியதாவது:உளுந்து பாசி பயிறு பயிர்கள் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய் காய்க்கும் நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்து விட்டது.
உழவு, விதை விதைப்பு களை எடுப்பு மருந்தடித்தது என ஏக்கருக்கு ரூ 15,000 வரை செலவான நிலையில் மழையால் பூக்கள் உதிர்ந்து விட்ட தால் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மருந்து தெளித்தால் மட்டுமே செடிகள் மீண்டும் பூ பூத்து காய் காய்க்கும். ஏற்கனவே கடன் வாங்கிய நிலையில் மீண்டும் கடன் வாங்கி மருந்து அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது., என்றார்.

