/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் மழையால் காய்கறி சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு; lவிற்பனைக்கு அவசியமாகுது அரசு நடவடிக்கை
/
தொடர் மழையால் காய்கறி சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு; lவிற்பனைக்கு அவசியமாகுது அரசு நடவடிக்கை
தொடர் மழையால் காய்கறி சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு; lவிற்பனைக்கு அவசியமாகுது அரசு நடவடிக்கை
தொடர் மழையால் காய்கறி சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு; lவிற்பனைக்கு அவசியமாகுது அரசு நடவடிக்கை
ADDED : நவ 24, 2025 08:06 AM

மாவட்டத்தில், தோட்ட பயிர்களான சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, கத்தரி, மிளகாய், அதலைக்காய் பயிரிட்டுள்ளனர். விளைச்சல் ஏற்பட்டு வீதி வீதியாக சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேரடியாக, குறைந்த விலைக்கு இடைத்தரகு இல்லாமல் விற்பனை செய்வதுடன், லாபமும் கிடைக்கிறது. தொடர்ந்து, பருவமழை பெய்து வருகிறது. மேலும் தோட்ட பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.
விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் வீதி வீதியாக சென்று விற்பது என்பது முடியாத காரியம். காய்கறிகள் வாடிவிடும் என்பதால் இருப்பு வைத்து விற்க முடியாது. நஷ்டம் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்க கூடும். உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு உழவர் சந்தை பொருத்தமானதாக இருக்கும். அன்றாடம் செடியில் இருந்து பறித்து, தரமான காய்கறிகள் விற்பனை செய்யும் போது, பல்வேறு கிராமங்களிலிருந்து வரும் மக்கள் ஆர்வமுடன் வாங்க வருவர். அன்றாடம் விற்று தீர்ந்து விடும். வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படாது.
இந்நிலையில், நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தையை எதிர்பார்க்கின்றனர். பெரும்பாலான இடங்களில் உழவர் சந்தை அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வது இல்லை. விவசாயிகளுக்கு தேவை யான போக்குவரத்து வசதி, விதை, உரம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று தருவது இல்லை. கஷ்டப்பட்டு உழைத்து, விளைய வைத்த காய்கறிகளை விற்க முடியாமல், இடைத்தரகர் மூலம் விற்க வேண்டிய சூழ்நிலையால் நஷ்டம் ஏற்பட்டு, தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருவதால் காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து, உழவர் சந்தையில் விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

