/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதை விற்பனையில் லேபிள் அவசியம்
/
விதை விற்பனையில் லேபிள் அவசியம்
ADDED : நவ 24, 2025 08:06 AM
விருதுநகர்: விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது வழங்கும் ரசீதில் விவசாயி பெயர், முகவரி, அலைபேசி எண், கையெழுத்து, விற்பனையாளர் ஒப்பம், பயிர் ரகம், குவியல் எண், அளவு, விலை, மொத்த தொகை, விற்பனை நிலையத்தின் முகவரி, பில் எண், நாள் ஆகிய விவரங்கள் இருக்க வேண்டும்.
அதே போல விதைகள் விற்பனை செய்யும் கலன்களில் லேபிள் இடம் பெற்றிருக்க வேண்டும். இதில் லேபிள் எண், பயிர் ரகம், குவியல் எண், பரிசோதனை செய்த நாள், காலாவதி நாள், முளைப்புத்திறன், புறத்துாய்மை, இனத்துாய்மை, எடை, விதை நேர்த்தி செய்திருந்தால் அதன் விவரம், விதை உற்பத்தியாளர், விற்பனையாளர் விவரம், பரிந்துரைக்கப்பட்ட பருவம், மாநிலம் சார்ந்த விவரங்கள் இருக்க வேண்டும்.
இவற்றில் ஆதார விதை, சான்றளிக்கப்பட்ட விதை, உண்மைநிலை விதை ஆகியவற்றில் அனைத்து விவரங்கள் அடங்கிய லேபிள் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

