ADDED : ஜூன் 18, 2025 04:04 AM
விருதுநகர்:கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜிவா செய்திக்குறிப்பு: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் ஜூலை 6ல் காலை 5:30 மணிக்கு நடக்கிறது. 5 கி.மீ., போட்டியான இது சென்னை தீவுத்திடலில் துவங்கி சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை சென்று மீண்டும் சென்னை தீவுத்திடல் வந்து முடியும். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம், சான்று, டி-ஷர்ட், சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 97909 54671 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கலாம், என்றார்.