ADDED : அக் 27, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் தமிழரசி தலைமையில் நடந்தது.
இதில் பெண் ஆசிரியர்கள், மாணவிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு வழங்குவது பற்றி மாநிலத் தலைவர் மணிமேகலை பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராஜலட்சுமி, துணை ஒருங்கிணைப்பாளராக தங்கம்மாள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் கவிதா நன்றி கூறினார்.