ADDED : அக் 13, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்ஸவம் ஒன்பதாம் திருநாளில் பெரிய திருவோணத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை 6:30 மணிக்கு கோயிலிலிருந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 :15 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 45 நிமிடங்களில் ரத வீதி சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், பட்டர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், அறநிலைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.