/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை
/
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை
ADDED : நவ 21, 2024 04:02 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மக்காச்சோள பயிர்களை சேதம் செய்யும் காட்டுப்பன்றி மான்களை கட்டுப்படுத்துவதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்திரப்பட்டி அடுத்த நரிக்குளம் சிவலிங்காபுரம், அருணாச்சலபுரம், வடகரை, மேட்டு வடகரை, என். புதுார், செல்லம்பட்டி, கொருக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தேவி ஆற்றின் நீர்வழிப் பாதை, நரி குளம், சிவலிங்காபுரம் உள்ளிட்ட கண்மாய்களின் கருவேல மர புதர்களில் பதுங்கும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
நரிக்குளத்தை சேர்ந்த கண்ணதாசன், முத்து, சண்முகவேல், முத்துமாரியம்மன் உள்ளிட்டோரின் மக்காச்சோள சாகுபடி நிலங்களில் இரவு நேரம் காட்டு பன்றிகள் புகுந்து விளைந்துள்ள மக்காச்சோள கதிர்களை தின்று வருகின்றன. மான்களும் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.