
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் பிரேமிக வரதனுக்கு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
நேற்று கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. கோவிந்தா கோஷங்களை எழுப்பி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்துவர் மைய பக்தர்கள் செய்திருந்தனர்.

