/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
/
திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 30, 2025 03:48 AM

சிவகாசி: திருத்தங்கல் பகுதியில் அடிப்படை வசதி கோரி நான்கு ஆண்டுகளாக கண்டு கொள்ளாததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி வி.சி.கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமை வகித்தார். மனிதநேயன், நவமணி, திலீபன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் பேசினார்.
இதில் திருத்தங்கல் பகுதியில் சுகாதார வளாகம், கழிவுநீர் கால்வாய், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்பின் மாநகராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.
அங்கு அதிகாரிகள் இல்லாததால் மாநகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மேயர் சங்கீதா அலுவலகம் வந்ததை அடுத்து, அவரிடம் மனு அளித்து சென்றனர்.