ADDED : நவ 04, 2025 03:51 AM
ராஜபாளையம்:  ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பருத்தி விவசாயிகள் கிஷான் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025--26 நிதியாண்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளதை அடுத்து விவசாயிகள் ஆதார் எண், அடங்கல் மூலம் கிஷான் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

