ADDED : செப் 28, 2026 06:54 PM
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: பருத்தியின் விளைச்சலை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது இந்த பருத்தி உற்பத்தி திறன் இயக்க திட்டம் இதில் குறைந்த பரப்பில் அதிக செடிகளை பயிரிடும் முறைகளான உயர் அடர்த்தி நடவு முறை, செயல்விளக்கத்திடலுக்கு ரூ.14 ஆயிரம், நெருக்கமான இடைவெளி சாகுபடி செயல்விளக்கத்திடலுக்கு ரூ.18,500ம், மிக நீண்ட இழையுடைய பருத்தி சாகுபடி செயல்விளக்கத்திடலுக்கு ரூ.9500ம், பருத்தியின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக மகசூல் பெறவும், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சாகுபடி செயல் விளக்கத்திடலுக்கு ரூ.7500ம், ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்புக்கான செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு சாகுபடி செயல்விளக்க திடல்கள் 1660 எக்டேரும், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு மானியம் 800 எக்டேருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்புவோர் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம், என்றார்.
