ADDED : செப் 28, 2026 06:55 PM
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் நில அளவையர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
இதில் செப். 21ல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட நில அலுவலர் ஜெகன் குமார், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு பகுதியைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி நில அளவையர் ஜெயலட்சுமி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும், செப். 24ல் சேலம் மாவட்டத்தில் நில அளவையர் தங்கம், பிரிசில்லா மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, நில அளவையர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
